வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு, பழக்க தோஷத்தினால் வீட்டில் தூசு தட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கைகளில் வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவாளர்களைப் பற்றியும் படிக்க நேரிடும் போதெல்லாம், என் மனதிலும் அது போன்று பதிவு துவங்கும் ஆவல்
ஒரு கனாவைப் போல வந்து போகும். கனவும் பலித்தது. நிஜமானது. ஆனால் அதற்கு நான்கு மாத காலம் தேவைப்பட்டது. கனவு நனவாக்க் காரணம், நான்கு மாதங்களுக்கு முன், சென்னையில் வலைப்பதிவாளர்கள் சேர்ந்து நடத்திய 'வலைப்பட்டறையே'.
வலைப்பட்டறைமீதும், வலைப்பதிவாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த பதிவைத் துவக்கி
வைக்கிறேன்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//வலைப்பட்டறைமீதும், வலைப்பதிவாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த பதிவைத் துவக்கி
வைக்கிறேன்.
//
வருக வருக!
ஆரம்பமே அசத்தலான பதிவு!
ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக!
கலக்குங்க!
வலைப்பதிவு உலகிற்கு உங்களுக்கு இனிமையான வரவேற்புகள். உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டால் மிகவும் உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து நிறைய செய்திகளை, தகவல்களை பகிர்ந்து கொள்ள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!
வாங்க வாங்க. வலையுலகத்திற்கு எங்களது வரவேற்புகள். உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் சுவையாக எடுத்து வைக்க இது ஒரு நல்ல தளம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பானுமதி அம்மா,
வாருங்கள் வலைப்பதிவுக்கு, இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்
//வலைப்பட்டறைமீதும், வலைப்பதிவாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த பதிவைத் துவக்கி
வைக்கிறேன். ////
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு????? :O
நல்லா கமெடியா எழுதறீங்க மேடம்!! :-D
kidding!!! :-)
உங்கள் வரவு நல்வரவாகுக!!
தொடர்ந்து எழுதி சிறப்பிக்க வாழ்த்துக்கள்!! :-)
வாங்க...வாங்க..! வாழ்த்துக்கள்!
பானுமதி அம்மா,
வாங்க. வாங்க. உங்களுடைய இடுகைகளிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.
நல்வரவு!!!
-மதி
நன்றி நாமக்கல் சிபி.
முடிந்த வரை கலக்கப் பார்க்கிறேன்
வாங்க மேடம்.
உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுக்கும் சொல்லுங்க.
வந்து கலக்குங்க!
மங்களூர் சிவா
வாங்க.வாங்க.வாழ்த்துக்கள்.
தென்றலின் தளத்திலிருந்து உங்களைப் பற்றி அறிந்தேன்.
வணக்கம்.
கொஞ்சம் தாமதமான வரவேற்பு
மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். உங்களின் வங்கி அனுபவங்கள் பலருக்கும் பயன்படும் வண்ணம் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
Post a Comment